எண்ணெய், டூத் பேஸ்ட், சோப், உள்ளிட்ட பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி 18% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
எண்ணெய், பற்பசை, சோப்பு உள்ளிட்ட பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி 29.3 சதவீதத்திலிருந்து 18% குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். மேலும் பிரிட்ஜ், வாஷிங் மெஷின், உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களின் வரி, உணவு பொருட்கள், உணவகங்கள் வரியும் குறைக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
அதேபோல அரிசி, கோதுமை, மாவு, இயற்கை தேன் ஆகியவை மீதான ஜிஎஸ்டி வரி ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.. இந்த அறிவிப்பு மக்களுக்கு சூப்பர் அறிவிப்பாக பார்க்கப்படுகிறது.
தினமும் பயன்படுத்தப்படும் பொருள்களின் மீதான வரி பெரும்பாலும் பூஜ்யத்தில் இருந்து 5% ஆக உள்ளது. வீட்டு வளாக கட்டுமானத்தின் மீதான வரி 5 % ஆக பொதுவாக குறைக்கப்பட்டு, கட்டுபடியாகக்கூடிய விலையிலான வீடுகள் மீதான வரி 1 சதவீதமாக குறைக்கப்பட்டது. உணவகங்களும் 5% கீழ் கொண்டுவரப்பட்டன. pic.twitter.com/P99Iuwg3kW
— PIB in Tamil Nadu (@pibchennai) August 24, 2020