Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு இன்று கனமழை … சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில்  இன்று கன மழை பெய்யும் என்று  சென்னை வானிலை ஆய்வு மையம்  தகவல் தெரிவித்துள்ளது.

கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று தமிழகாதில் உள் மாவட்டமான திருச்சி ,பெரம்பலூர்,கரூர்,நாமக்கல் , சேலம் போன்ற மாவட்டங்களில் பரவலாக பலத்த மழை இருந்தது . திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று கனமழை சுமார் ஒருமணி நேரத்திற்குமேல்  கொட்டி தீர்த்தது.  இந்த நிலையில் மண்டல வானிலை ஆய்வு மையம் தற்போது வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பில், தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்றும் பரவலாக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி ,கரூர்,சேலம்,நாமக்கல்,விழுப்புரம் போன்ற 20 மாவட்டங்களில் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மழை  பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அடுத்த சில நாட்களுக்கு இந்த வெப்ப சலனம் காரணமாகவும் ,கீழ் அடுக்கில் ஏற்பட்டுள்ள சுழற்சியின்  காரணமாகவும் தொடர்ந்து மழை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மழையினால் உள்தமிழக மாவட்டத்தில்  பயிரிடக்கூடிய மானாவாரி சாகுபடியான சோளம், கம்பு, கேழ்வரகு ,கடலை போன்ற பயிர்களுக்கு பயனுள்ளதாக அமைகிறது.

Categories

Tech |