மதுரை மாவட்டம் மேலக்குயில்குடி பகுதியில் வசித்து வருபவர் பால்பாண்டி.. ஆட்டோ ஓட்டும் தொழில் செய்துவரும் இவருக்கு 17 வயதில் மகள் மற்றும் மகன் என 2 பிள்ளைகள் இருக்கின்றனர். இந்தநிலையில் கடந்த 7ஆம் தேதியன்று மதியம் 2 மணியளவில் டியூசனுக்கு படிக்கச் சென்ற பால்பாண்டியின் மகள் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.. எனவே மகள் காணாமல் போய்விட்டதாக நாகமலை புதுக்கோட்டை காவல்நிலையத்தில் பால்பாண்டி புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த சிறுமியை பல இடங்களில் தேடி வந்தனர்.. இந்நிலையில் மதுரை ஒந்திமலைப் பகுதியில் வசித்துவரும் மகாராஜன் என்பவரின் மகன் பரதன் மேலக்குயில்குடியில் இருக்கும் அவரது தாத்தா வீட்டுக்கு அடிக்கடி சென்றுவருவதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.. அப்போது அவரின் பக்கத்து வீட்டில் வசித்துவந்த பால்பாண்டியின் மகளுடன் பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது..
இதையடுத்து சம்பவத்தன்று அந்தசிறுமியை திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைக் கூறி கடத்திச்சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.. இதனையடுத்து அந்தசிறுமியைமீட்ட நாகமலை புதுக்கோட்டை போலீசார் பால்பாண்டி மற்றும் அவரது மகள் கொடுத்த புகாரின்பேரில் பரதனை போக்சோ சட்டத்தின்கீழ் கைதுசெய்து ஜெயிலில் அடைத்தனர்.