Categories
மாநில செய்திகள்

கூட்டுறவு வங்கிகளில்… ” தவறு செய்தால் தப்பமுடியாது” – செல்லூர் ராஜு

நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளில் 58,000 கோடி ரூபாய் முதலீடு இருப்பதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

மதுரை பழங்காநத்தத்தில் ஒன்றரைக் கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கூட்டுறவுத் துறை அலுவலக வளாகத்தை இன்று அமைச்சர் செல்லூர் ராஜு திறந்து வைத்தார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழகத்தில் செயல்படும் கூட்டுறவு வங்கிகள் அனைத்தும் இன்னும் ஒரு மாதத்தில் இணையத்தால் இணைக்கப்பட்டு சிறப்பாக செயல்படும் எனத் தெரிவித்தார்.

மேலும் தமிழகக் கூட்டுறவு வங்கிகளில் இதுவரை 58 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு இருப்பதாகவும், கூட்டுறவு வங்கிகளில் ஏதேனும் முறைகேடு நடந்தாலும், யார் தவறு செய்தாலும், அரசிடமிருந்து தப்பிக்கவே இயலாது என்றும் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார்.

Categories

Tech |