Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தொடர் நோய்யால் அவதி… பிளேடால் கழுத்தறுத்து தற்கொலை செய்த முதியவர்…!!

திருப்பூர் அருகில் நோய் குணமாகாததால்  தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர்   மாவட்டம்  கரட்டாங்காட்டையை  சேர்ந்தவர் முருகசாமி.  இவருடைய மனைவி ராமாத்தாள் .85வயதான முருகசாமி  ஆஸ்துமா நோய்யால் பாதிக்கப்பட்டுள்ளார்.   திருப்பூர்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவர் .  ஒருவாரத்திற்கு முன்புதான்  மருத்துவமணையில் இருந்து வீடு  திரும்பியுள்ளார் மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால்  தான் தற்கொலை செய்து கொள்ள போவதாக தன்  மனைவியிடம் கூறியுள்ளார்.

இந்தநிலையில் முருகசாமி திடீரென்று தனது கழுத்தை பிளேடால் அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதை  கண்ட அவரது மனைவி , அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு  அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர்.பின்னர்  சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர்  சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார் . இச்சம்பவம் குறித்து திருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றன.

Categories

Tech |