ஜார்கண்ட் மாநிலத்தில் கொரோனா நோயாளி செய்த அட்டகாசம் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
ஜார்கண்ட் மாநிலத்தில் சாந்து குப்தா என்ற குற்றவாளிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் அப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தனிமைப்படுத்தப் பட்டிருக்கும் இவருக்கு பலர் சட்டவிரோதமாக பல சேவைகளை தொடர்ந்து வழங்கி வருவதாக குற்றச்சாட்டு ஒன்று தொடர்ந்து எழுந்து வந்தது.
இந்நிலையில் அதற்கான ஆதாரபூர்வமாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதன்படி, கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளி கைவிலங்குடன் மது ஊற்றி குடித்துவிட்டு, வகை வகையான உணவுகள் சாப்பிடும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அவர் மீதும் அவருக்கு மது மற்றும் உணவு பொருளைகளை வாங்கி கொடுத்தவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது..