எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ராணுவத்துக்கு, இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்துள்ளது.
பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் மீறி எல்லையில் பயங்கர தாக்குதல்களை நடத்திக் கொண்டிருக்கிறது. பாகிஸ்தானின் தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகின்றது. ஆனாலும் தொடர்ந்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் ராணுவம், ஜம்மு-காஷ்மீரின் ராஜோரி மாவட்டத்தில் இருக்கின்ற சுந்தர்பேனி செக்டாரில் அத்துமீறி சிறிய ரக ஆயுதங்கள் மற்றும் மோட்டார்கள் மூலமாக பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது.
பாகிஸ்தானின் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து கொண்டிருக்கிறது. அந்த மோதலில் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.