தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் அமைந்துள்ள வாணியாறு அணையில் சடலம் ஒன்று மிதப்பதாக பாப்பிரெட்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.. தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்து சென்ற போலீசார் அணையிலுள்ள சடலத்தை மீட்டு விசாரணை செய்தனர்.
இந்த விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட நபர் பாப்பிரெட்டி மாரியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சின்னராஜ் என்பவரின் மகன் சக்தி (வயது 30) என்பதும், அதுமட்டுமில்லாமல் சக்திக்கு பண்டாரசெட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் நேற்று தான் திருமணம் நடந்தது என்பதும் தெரியவந்தது.
இச்சம்பவம் குறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்தியை யாரேனும் கொலை செய்தார்களா? அல்லது அணையில் தவறிவிழுந்து இறந்தாரா? என்ற பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமான அடுத்த நாளிலேயே புதுமாப்பிள்ளை வாணியாறு அணையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..