ரவுடிகளுடன் அரசியல்வாதிகள் தொடர்பு வைத்திருப்பதாக நீதிமன்ற நீதிபதிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் தற்போது பல்வேறு சூழலில் போலீசார் தாக்கப்படும் நிலை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தூத்துக்குடி காவலர் சுப்பிரமணியனின் மரணம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் யாரும் வாய் திறக்காதது வேதனை தருவதாக, உள்ளது என நீதிபதிகள் கூறியுள்ளனர். இந்நிலையில் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்ததை எதிர்த்து வேலு என்பவர் தொடர்ந்த வழக்கு, நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அந்த விசாரணையில், ரவுடிகள் யார்? அரசியல்வாதிகள் யார் ?என்ற வித்தியாசம் எதுவும் இல்லாமல் எல்லோரிடமும் சட்ட விரோத ஆயுதங்கள் இருப்பது தெரிய வருவதாக நீதிபதிகள் குறிப்பிட்டனர். எனவே, ரவுடிகளையும் , சமூக விரோதிகளையும் ஒழிக்க கடுமையான சட்டங்களை விதிக்குமாறு, தமிழக அரசுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், 2 வாரத்திற்குள் காவல் துறை டிஜிபி இதுகுறித்து பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஒத்தி வைத்துள்ளனர்.