நிரந்தரம் இல்லா வேலை பார்ப்பவர்களுக்கு நிரந்தர பணி வழங்கிட வேண்டுமென தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர்.
பணி நிரந்தரம் இல்லாமல் வேலை பார்க்கும் மின்வாரிய தொழிலாளர்களை பணியை நிரந்தரமாக்க, தமிழ்நாடு மின்சார வாரிய ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தினர் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, சென்ற 15 வருடங்களாக வேலை பார்த்து வரும் 5,000 பேரையும் வேலையில் நிரந்தரம் செய்திட வேண்டும்.
மேலும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தினசரி கூலி 380 ரூபாய் வழங்கிட வேண்டும், அதுமட்டுமில்லாமல் கேங்மேன் பதவியை ரத்து செய்திட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகள் அந்தப் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இத்தகைய கண்டன ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் அதிகமானோர் கலந்து கொண்டு குரல் கொடுத்தனர்.