Categories
மாநில செய்திகள்

“கொரோனா தடுப்பு மருந்து”… ஆராய்ச்சியில் இறங்கியது சித்த மருத்துவம்…!!

கொரோனா வைரஸ்க்கான தடுப்பு மருந்தை சித்த மருத்துவ இயக்குனரகம் தொடங்க இருப்பதாக இன்று கையெழுத்திட்டுள்ளது.

உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா தொற்றின் காரணமாக பல்வேறு நாடுகளில் தடுப்பு மருந்து தயாரிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில், சென்னை டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தில் கொரோனா தொற்றுக்கு மருந்து கண்டறிய சித்த மருத்துவக் குழுவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

துணை வேந்தர் சுதா சேஷய்யன் முன்னிலையில், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை இயக்குநர் கணேஷ், தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் அஸ்வத் நாராயணன் போன்றோர் கையெழுத்திட்டனர். இதன் மூலம், தமிழ்நாடு அரசின் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநரகம் ஆகியவை இணைந்து கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்த சித்த மருந்துக்கான ஆராய்ச்சியை தொடங்க இருக்கிறது.

Categories

Tech |