நாடு முழுவதும் இ – பாஸ் சேவை ரத்து செய்யப்படுவது குறித்து வருகிற 29-ஆம் தேதி முதலமைச்சர் தெரிவிப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொரோனா தாக்கத்தின் காரணமாக நாடு முழுவதும் 6 ஆம் கட்ட ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. ஏற்கனவே இந்த ஊரடங்கில் அரசு ஏராளமான தளர்வுகள் வழங்கியுள்ளது. இருந்தாலும் ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கு காரணமாக மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர். இதனைப் போக்க நாடு முழுவதும் ஊரடங்கை ரத்து செய்ய வேண்டும், அல்லது மாநிலங்களுக்கும் மாவட்டங்களுக்கும் இடையே உள்ள இ – பாஸ் சேவையை ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.
மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி புதுவையில் ஏற்கனவே இ – பாஸ் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் ரத்து செய்வது குறித்து எடப்பாடி பழனிச்சாமி வருகின்ற 29 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்த இருக்கிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் ஏழாம் கட்ட ஊரடங்கு வழங்கப்படுமா? அல்லது இ – பாஸ் முறை ரத்து செய்யப்படுமா? இது தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளார்.
ஏற்கனவே நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர்கள் இ- பாஸ் முறை எளியதாக்கப்பட்டதால் தொற்று பாதிப்பு அதிகம் இருப்பதாக கருத்து தெரிவித்தனர். மேலும் பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும், பரிசோதனை முகாம்களை அதிகப்படுத்தவும் அறிவுரை வழங்கப்பட்டது. இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு வருகின்ற 29ஆம் தேதி நடக்க இருக்கும் ஆலோசனை கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.