உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு கோடியை தாண்டியுள்ளது.
சீனாவிலுள்ள வூஹான் மாகாணத்தில் தொடங்கிய இந்த கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அதிகப்படியான மனித பலியை வாங்கி வருகிறது. இந்த கொடிய வைரசுக்கு விஞ்ஞானிகள் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் சோதனையில் இறுதிகட்டத்தை எட்டியுள்ளனர். இந்தக் கொடிய வைரஸ் தன்னுடைய தாக்கத்தை ஒருபக்கம் காட்டிக் கொண்டு வந்தாலும் தன்னலமில்லாத மருத்துவர்களின் சேவையால் கோடிக்கணக்கான மக்கள் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.
அந்த வகையில் தற்பொழுது வரை ஒரு கோடியே 65 லட்சத்தை எட்டியுள்ளது குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை. இப்பொழுது வரை உள்ள நிலவரப்படி நாடு முழுவதும் இரண்டு கோடிக்கும் அதிகமானோர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த கொடிய வைரஸ்க்கு பலியானவர்கள் எண்ணிக்கை எட்டு லட்சத்தை தாண்டியுள்ளது.
அதுமட்டுமில்லாமல், நாடு முழுவதும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கையை அதிக அளவில் கொண்ட நாடுகள் பட்டியல் பின்வருமாறு ,முதலிடம் – அமெரிக்கா, இங்கு தொற்றில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 32,16,065, இரண்டாமிடம் – பிரேசில், இங்கு 27,78,709 ஆகவும், மூன்றாமிடம் – இந்தியா, இங்கு குணமடைந்த எண்ணிக்கை 23,38,036 ஆகவும், நான்காம் இடம் – 7,73,095, ஐந்தாமிடம் – தென் ஆப்பிரிக்கா, இங்குு 5,16,494 ஆகவும் உள்ளன.