ஓசூர் கோட்டாட்சியர் குணசேகரன் மற்றும் வட்டாச்சியர் செந்தில்குமார் சென்ற காரின் மீது லார்ரி மோதிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஓசூர் அருகே கர்நாடகாவிற்கு எம் சேண்ட் கடத்தி சென்ற லாரியை துரத்தியபோது கோட்டாட்சியர் மீது லாரி மோதியது. இதில் சிறிது நூலிழைவில் கோட்டாட்சியர் உயிர் தப்பினார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை அறிந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
போலீஸ் விசாரணையில் முன்னால் சென்ற மணல் லாரியை துரத்தும் போது கார் மீது பின்னால் வந்த மற்றொரு மணல் லாரி மோதியதாகவும், இதில் ஓசூர் கோட்டாட்சியர் குணசேகரன் மற்றும் வட்டாச்சியர் செந்தில்குமார் ஆகிய இருவரும் நூலிழையில் உயிர் பிழைத்ததாக தகவல் தெரிவிக்கின்றன.
மேலும் இந்த சம்பவம் கொலை செய்யும் திட்டத்துடன் கார் மீது லாரி மோதியதா? அல்லது விபத்தா என போலீசார் உடனடி விசாரணை நடத்தி வருகின்றனர்.