Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தாலி கட்டிவிட்டு… சிறுமியை பலாத்காரம் செய்த இளைஞன்… கைது செய்த போலீசார்..!!

திருவொற்றியூர் அருகே 17 வயது சிறுமியை இளைஞன் ஒருவன்  பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருவொற்றியூரில் 17 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார்.. இந்நிலையில் கடந்த 18 ஆம் தேதி முதல் தனது மகளை காணவில்லைஎன்றும், கொருக்குப்பேட்டை ஐ.ஓ.சி பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் கடத்தி சென்றுவிட்டதாகவும் அந்த சிறுமியின் பெற்றோர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்திருந்தனர்.

இந்த நிலையில் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வந்த திருவொற்றியூர்போலீசாருக்கு , காணாமல் போன சிறுமி கொருக்குப்பேட்டை பகுதியில் இருப்பதாக ரகசியத் தகவல் ஓன்று வந்தது. இந்தத் தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், சிறுமியையும், அவருடன் இருந்த இளைஞரையும் பிடித்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், பிடிபட்ட இளைஞர் கொருக்குப்பேட்டை ஐ.ஓ.சி பகுதியில் வசிக்கும் யுவராஜ் என்பதும், அவர் எம்.சி. சாலையிலுள்ள துணிக்கடையில் பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது.

அதனைத்தொடர்ந்து தொடர்ந்து கடந்த சில மாதங்களாக சிறுமியைக் காதலிப்பதாகவும், கல்யாணம் செய்து கொள்வதாகவும் ஆசையாக பேசி, கோவிலுக்கு அழைத்துச் சென்று தாலி கட்டி, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.. இதையடுத்து சிறுமியை பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார், அந்த இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |