Categories
கிரிக்கெட் விளையாட்டு

சென்னையிடம் மீண்டும் சரணடைந்த கொல்கத்தா…!!

கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 

ஐ.பி.எல் 29 வது லீக் தொடரில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  அணியும் மோதியது.இப்போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில்  மாலை 4 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன்  தோனி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழந்து  161 ரன்கள் குவித்தது. கொல்கத்தாநைட் ரைடர்ஸ் அணியில்  அதிகபட்சமாக கிறிஸ் லின் 51 பந்துகளில் 82 ரன்கள்  (6 சிக்ஸர், 7 பவுண்டரி)  விளாசி ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளும், ஷர்துல் தாகூர் 2 விக்கெட்டுகளும், மிச்செல் சான்டனர் 1 விக்கெட்டும் வீழ்த்தினார்.

Seithi Solai

இதையடுத்து 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணியின் தொடக்க வீரர்களாக சேன் வாட்சனும், பாப் டுப்லெஸியும் களமிறங்கினர்.  பாப் டுபிலெஸி நல்ல துவக்கம் கொடுத்தார். வாட்சன் மீண்டும் 6 ரன்னில் ஏமாற்றமளித்தார். அதன் பிறகு சுரேஷ் ரெய்னா  களமிறங்கினார்.சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த பாப் டு பிலெஸி 25 (16)ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ராயுடுவும் 5 ரன்னில் வெளியேறினார்.

இதையடுத்து வந்த கேதார் ஜாதவ் அதிரடியாக விளையாடி 20 (12) ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து வந்த தோனியும், ரெய்னாவும் ஜோடி சேந்தனர். தோனி 1 சிக்ஸருடன் 16 (13) ரன்னில் வெளியேறினார். இதையடுத்து வந்த ஜடேஜாவும், ரெய்னாவும் சிறப்பாக விளையாடி வெற்றியை நோக்கி சென்றனர். அதன் பின் அரைசதம் கடந்தார் ரெய்னா.

கடைசி ஓவரில் வெற்றிக்கு 8 ரன்கள் தேவைப்பட முதல் பந்தில் ஜடேஜா பவுண்டரி அடிக்க அதன் அடுத்தடுத்து சிங்கிள் எடுத்து சென்னை அணி வென்றது. இறுதியில்  19.4 ஓவரில் 5 விக்கெட் இழந்து 162 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சென்னை அணியில் ரெய்னா 58* (42) ரன்களுடனும், ஜடேஜா 31 (17) ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக சுனில் நரேன், பியூஸ் சாவ்லா ஆகியோர் தலா  2 விக்கெட்டுகளும், ஹாரி கர்னி 1 விக்கெட்டும் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி 14 புள்ளியுடன் மீண்டும் முதலிடத்தில் உள்ளது.

Categories

Tech |