தமிழ்நாடு இந்தியாவின் மருத்துவ சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது என்று முதல்வர் கூறினார்.
நேற்று நடந்த தனியார் மருத்துவ கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட தமிழக முதல்வர் காணொளியில் பேசுகையில்….. அம்மாவின் ஆட்சியில் 254 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் நிறுவப்பட்டன. மேலும் 165 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 30 படுக்கை வசதி, ஸ்கேன் போன்ற வசதிகளுடன் நிலை உயர்த்தப்பட்டு உள்ளது. அதனையடுத்து மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 12,823 மருத்துவர்கள், 14,588 செவிலியர்கள் உள்பட 32,660பணியாளர் தேர்வு செய்யப்பட்டு பணிநியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அதனையடுத்து தமிழ்நாடு அரசு,அரசு மருத்துவமனை புற்றுநோய்க்கு உரிய சிகிச்சை அளிக்கும் வகையில் 190 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அரசு மருத்துவமனையில் ஹீ டியம் அக்ஸிலேட்டர் எனும் உயர் தொழில்நுட்ப கருவி நிறுவப்பட்டு வருகிறது. சென்னை அடையாறு புற்றுநோய் மையத்தை 120 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாநில அளவில் புற்றுநோய் சிகிச்சை மையமாக தரம் உயர்த்தும் பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது.
காஞ்சிபுரம் காரம் பேட்டை அரசு அறிவியல் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனையில் 120 கோடி ரூபாய் மதிப்புள்ள மேன்புமிகு மையம் ஏற்படுத்த பணி தொடங்கப்பட்டுள்ளது. உயர்தர மருத்துவ சேவைகளை வழங்குதல் மட்டுமல்லாமல் மிகச்சிறந்த மனித வளம் மற்றும் கட்டமைப்பு ஏற்படுத்தி தருவதிலும் தமிழகம் இந்தியாவிலேயே ஒரு முன்மாதிரி மாநிலமாக திகழ்ந்து வருகிறது.
இதன் காரணத்தால் தமிழ்நாடு இந்தியாவின் மருத்துவ கழகமாக விளங்கி வருகிறது. வெளி மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் மிக தரமான மருத்துவ சிகிச்சை குறைந்த சேவையில் பெறுவதற்காக பலரும் தமிழகத்திற்கு வருவதன் மூலம் தமிழ்நாடு இந்தியாவின் மருத்துவ சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது என்று முதல்வர் கூறினார்.