Categories
தேசிய செய்திகள்

அச்சம் கொள்ளும் தெலுங்கானா… ஒரே நாளில் 2,579 பேர் பாதிப்பு…!!!

தெலுங்கானாவில் இன்று ஒரே நாளில் மட்டும் 2,579 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநில மற்றும் மத்திய அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அதில் குறிப்பாக தெலுங்கானாவில் கொரோனா பாதிப்பு மிக அதிகளவு காணப்படுகிறது. அங்கு இன்று ஒரே நாளில் மட்டும் 2,579 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,08,670 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் இன்று மட்டும் 9 பேர் உயிரிழந்ததால், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 770 ஆக அதிகரித்துள்ளது. அதே சமயத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 1,752 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதனால் தற்போது வரை குணமடைந்து வீடு திரும்பிய வர்களின் எண்ணிக்கை 84,163 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 23,737 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக மாநில சுகாதாரத் துறை கூறியுள்ளது.

Categories

Tech |