அமெரிக்க சீன நாடுகளுக்கு இடையேயான வர்த்தக பேச்சுவார்த்தைகளை தொலைபேசி வாயிலாக பேசியுள்ளனர்.
உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் சீனாவிலுள்ள வூஹான் மாகாணத்தில் இருந்துதான் பரவியது என அமெரிக்க அதிபர் குற்றம்சாட்டி வருகிறார். இதனால் அமெரிக்க மற்றும் சீன நாடுகளுக்கிடையே வர்த்தக போர் நிலவி வருகிறது. மேலும் சீனாவில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரி வசூலிக்கப்படும் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அதே போல் சீனாவிலும் அதிக வரி வசூலிப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் நடைமுறையில் இருந்தாலும் அதனை அமல் படுத்த முடியாமல் இரு நாடுகளுக்கும் இடையே கடும் மோதல் நிலவி வருகிறது. இந்நிலையில் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக முதல் கட்டத்தை அமல்படுத்த அமெரிக்க மற்றும் சீன நாடுகளின் தலைவர்கள் தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தைகளை நடத்தி இருக்கின்றனர்.