Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கொரோனா தடுப்பு மருந்து கோவிஷீல்டு… சென்னையில் இரண்டு மருத்துவமனைகளுக்கு ஒப்புதல்…!!!

சென்னையில் உள்ள இரண்டு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பு மருந்து கோவிஷீல்டை பரிசோதனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் ரஷ்யா தடுப்பூசியை கண்டறிந்து பதிவு செய்துவிட்டோம் என்று கூறியுள்ளது. இதனைத் தொடர்ந்து உலக நாடுகள் அனைத்தும் கோரொனா தடுப்பூசி தயாரிக்கும் முயற்சியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்தியாவின் தயாரிக்கப்பட்டுள்ள மூன்று விதமான தடுப்பூசிகள் மருத்துவ பரிசோதனையில் இருக்கின்றன.

இந்நிலையில் லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சி மையம் தயாரித்துள்ள கோவிஷீல்டு என்ற குருணை மருந்தை தயாரிப்பதற்கு இந்தியாவில் புனே சீரம் இன்ஸ்டியூட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த மருந்து சோதனையை மேற்கொள்வதற்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் அனுமதி வழங்கியுள்ள நிலையில், முதற்கட்ட பரிசோதனை முடிவடைந்த நிலையில், தற்போது இரண்டாவது கட்ட மனித பரிசோதனை தொடங்கப்பட இருக்கிறது.

இந்தியாவில் இருக்கின்ற 17 நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் இந்த சோதனை நடத்தப் படுகின்றது. இந்தத் மருந்து மிகவும் குறைந்த விலையில், அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறக்கூடிய வகையில் ஜெனிடிக் முறையில் மருந்து தயாரிக்க திட்டமிட்டு சோதனை செய்யப்பட்டு வருகின்றது. மேலும் தமிழகத்திலுள்ள சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் ராமச்சந்திரா மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு இந்த மருந்து பரிசோதனை செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |