பிரேசில் அதிபர் தனது மனைவியின் வங்கி கணக்கை குறித்து கேட்டதற்காக மிரட்டிய சம்பவம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
2011-ம் ஆண்டு மற்றும் 2016-ம் வருடங்களுக்கு இடையில், ஜெயீர் போல்சனாரோவின் மனைவி, மிச்செல் போல்சனாரோவின் வங்கிக்கணக்கில் ஜெயீர் போல்சனாரோவின் நண்பரான கியூரோஸ் என்பவர் பல மில்லியன் டாலர் டெபாசிட் செய்தது பற்றி ஒரு பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. அவ்வாறு வெளியான செய்தி குறித்து விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிபர் ஜெயீர் போல்சனாரோ தலைநகர் பிரேசிலியாவில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது ஒரு ஊடகத்தின் பத்திரிக்கையாளர், ” தங்களது மனைவியின் வங்கிக் கணக்குகள் குறித்த விவரங்களை கூறுங்கள்” என கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த ஜெயீர் போல்சனாரோ, கோபத்துடன், “உங்கள் முகத்தில் குத்த விரும்புகிறேன் சரிதானே?” என்று கூறியுள்ளார். இதனைக் கேட்ட சக பத்திரிக்கையளர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே, பத்திரிக்கையாளர்களின் சந்திப்பிலிருந்து பாதியில் வெளியேறினார் ஜெயீர் போல்சனாரோ. இவர் தற்போது பலவகையான சர்ச்சைகளில் சிக்கி வருகிறாார் என்பது குறிப்பிடத்தக்கது.