Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இனி -அரசு அதிரடி அறிவிப்பு…

தமிழக அரசு  கொரோனா விதி மீறலில் ஈடுபடுவோருக்கு அதிக அபராதம் விதிக்க அவசர கால  சட்டம் கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

கடந்த ஆறு மாதங்களாக இந்தியாவை  நடுங்கவைத்திருந்தத கொரோனா வைரஸ்.  இதற்கு எதிராக வலுவான போராட்டத்தை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றனர்.  தினமும் பாதிப்பு  புதுப்புது உச்சத்தை எட்டி  கொண்டிருப்பதால், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அதில் பல்வேறு தளர்வுகளும்  அறிவிக்கப்பட்டு வருகின்றன.

பாதிப்பில் அதிக தொற்று கொண்ட மாநிலமாக தமிழகம் இரண்டாவது இடத்தில் இருந்து வரக்கூடிய நிலையில் மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.  குறிப்பாக நாடு முழுவதும் மத்திய அரசு இ பாஸ் சேவை ரத்து செய்தும் தமிழகம் முழுவதும் இ பாஸ் நடைமுறை தொடர்ந்து இருந்து வருகின்றது. இந்தநிலையில் தமிழக அரசு மேலும் ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளது.

தமிழக அரசு  கொரோனா விதி மீறலில் ஈடுபடுவோருக்கு அதிக அபராதம் விதிக்க அவசர கால  சட்டம் கொண்டு வர திட்டமிட்டுள்ளது. முகக்கவசம் அணியவேண்டும் என்றும், தனி மனித இடைவெளியை  கடைபிடிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு கூறியுள்ளது.  கடைபிடிக்காத  தனி மனித மற்றும் நிறுவனங்களுக்கு அதிக அபராதம் விதிக்கும் அவசர கால சட்டம் தற்போது  பிறப்பித்துள்ளது.

 

Categories

Tech |