Categories
Uncategorized

நாகர்கோயில் சிறுமியின் பாலியல் வழக்கு… முன்னாள் எம்எல்ஏ ஜாமீன் மனு தள்ளுபடி…!!!

நாகர்கோவில் சிறுமியின் பாலியல் வழக்கில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசனின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

நாகர்கோவிலில் உள்ள கோட்டாரை பகுதியை சேர்ந்த 15 வயதுடைய சிறுமி ஒருவர், சில தினங்களுக்கு முன்னர் வாலிபர் ஒருவருடன் மாயமானார். அதன் பின்னர் சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் இருவரையும் மீட்டு காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், கடந்த சில வருடங்களாக தனது தாயாரின் சம்மதத்துடன் பலர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமி கூறியுள்ளார். அது தொடர்பாக முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் உள்ளிட்ட பலர் போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

அந்த வழக்கில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரணை செய்த நீதிபதி, வழக்கு விசாரணையை வருகின்ற ஆகஸ்ட் 25ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார். இந்த நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நாகர்கோவில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Categories

Tech |