Categories
உலக செய்திகள்

“பிளாஸ்மா சிகிச்சை”… ஆரம்ப கட்டத்தை தாண்டவில்லை… உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு…!!

பிளாஸ்மா சிகிச்சை ஆரம்ப கட்டத்தில் தான் இருக்கிறது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் தீவிரமாக பரவி பெரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி மருந்துகள் கண்டுபிடிக்காத நிலையில் பிளாஸ்மா சிகிச்சைக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. அமெரிக்காவில் இந்த சிகிச்சையை நடைமுறைப்படுத்த நேற்று முன்தினம் தான் அதிபர் டிரம்ப் ஒப்புதல் கொடுத்துள்ளார். ஆனால் உலக சுகாதார அமைப்பு இந்த சிகிச்சை முறையை அங்கீகரிக்கவில்லை. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சவும்யா சுவாமிநாதன் கூறுகையில், “பிளாஸ்மா சிகிச்சை இன்னும் பரிசோதனை கட்டத்தில்தான் இருக்கிறது என்று உலக சுகாதார அமைப்பு கருதுகிறது. அதன் ஆரம்பகட்ட முடிவுகள், இன்னும் அரைகுறையாகவே உள்ளன.

சென்ற நூற்றாண்டில் கூட பல்வேறு தொற்றுநோய்களை குணப்படுத்த பிளாஸ்மா சிகிச்சை பயன்படுத்தப்பட்டுள்ளது. அதன் வெற்றி விகிதம் வெவ்வேறான விதமாக இருக்கிறது. எனவே, அதன் பயன்பாட்டை தொடர்ந்து மதிப்பிட வேண்டும். இதுகுறித்த ஆய்வுகள் சிறிய அளவிலேயே நடக்கின்றன. குறைவான ஆதாரங்களே கிடைத்துள்ளன.
அதை தரப்படுத்துவது கடினம். ஒவ்வொருவரிடமும் நோய் எதிர்ப்பு சக்தி வேறுபடும் என்பதால், குணமடைந்த ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக பிளாஸ்மா சேகரிக்க வேண்டும்.

ஆபத்தை விட பலன்கள் அதிகமாக இருப்பதாக கருதினால், அவசர தேவைக்கு பிளாஸ்மா சிகிச்சையை நாடுகள் பயன்படுத்தலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சிகிச்சை முறையில் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து உலக சுகாதார அமைப்பு தலைமை இயக்குனரின் மூத்த ஆலோசகர், டாக்டர் புரூஸ் அயில்வார்டு கூறுகையில், “பிளாஸ்மா சிகிச்சையால் லேசான குளிர் காய்ச்சல் முதல் கடுமையான நுரையீரல் பாதிப்புவரை பக்க விளைவுகள் ஏற்படும்’’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |