Categories
கல்வி சென்னை மாநில செய்திகள்

தமிழக அரசின் 11 புதிய மருத்துவ கல்லூரியில் 2021-22 கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை..!!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி புதிதாக அமையவிருக்கும் 11 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் 2021 மற்றும் 2022 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

நேற்று சென்னை சவீதா மருத்துவ மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் 15 ஆவது ஆண்டு பட்டமளிப்பு விழா  “ஆன்லைன்” மூலமாக நடைபெற்றது. இதில் “வீடியோ கான்பிரன்ஸ்” மூலம் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.  “பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெறும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்” என்று கூறி உரையை ஆரம்பித்த எடப்பாடி பழனிசாமி,  “நலமான மாநிலமே வளமான மாநிலம்..” என்ற நோக்கத்தின் அடிப்படையில் ஏழை மக்களுக்கு மற்றும் அவர்கள் வாழும் பகுதிக்கு அருகிலேயே மிகவும் தரம் வாய்ந்த மருத்துவ வசதித்திட்டங்களை அமைத்து தருவதற்கு தமிழக அரசு திட்டமிட்டு  செயல்படுத்தி வருகிறது என்று  கூறியுள்ளார்.

Saveetha Medical College, Chennai - Images, Photos, Videos ...

அந்த உரையில் சவிதா நிகர்நிலை பல்கலைக் கழகமானது மாணவர்களுக்கு சிறந்த கல்வியினை அளித்து அவர்களை சிறந்த மருத்துவர்களாகவும் உருவாக்கி சாதனை படைத்து வருவதாக கூறியுள்ளார். மேலும் சிறந்த பொறியாளர்களையும், பிற துறை வல்லுனர்களையும் இந்நிறுவனமானது உருவாக்குவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்திலுள்ள 3,250 மருத்துவ படிப்பு இடங்களுடன் மேலும் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கான 1,650 புதிய மருத்துவ பட்டப் படிப்பு இடங்களை சேர்த்து  2021 – 22 கல்வியாண்டிற்கான முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

Categories

Tech |