உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா அமெரிக்காவில் மட்டும் அதிக பலி எண்ணிக்கையை கொடுத்துள்ளது.
உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பல நாடுகள் அல்லப்பட்டு வருகின்ற நிலையில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8,16,000 ஐ கடந்துள்ளது. இன்றைய வரை உள்ள நிலவரப்படி, 2,38,692 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் 66,36,325 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மருத்துவமனைகளில் 61 ஆயிரத்து 767 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது.
உலகம் முழுவதும் சற்று ஆறுதல் கொள்ளக்கூடிய விஷயம் கொரோனாவில் இருந்து 1 கோடியே 60 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர் என்பதுதான். ஆனாலும், உலகம் முழுவதும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 8,16,534 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த கொடிய கொரோனா வைரஸ்க்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்நாட்டில் பலியானோரின் எண்ணிக்கை, 1,81,097 ஆக உள்ளது. இரண்டாம் இடத்தில் பிரேசிலும், மூன்றாம் இடத்தில் மெக்சிகோவும், நான்காம் இடத்தில் இந்தியாவும் உள்ளது.