Categories
கோயம்புத்தூர் சென்னை மாவட்ட செய்திகள்

பட்டதாரிகளே உங்களுக்காக.. உதவித்தொகையுடன் கூடிய வேலைவாய்ப்பு…!!

கோவை மாநகராட்சியில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு முறையான பயிற்சி வகுப்புகளை வழங்குவதற்கு  “துலிப்” எனும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

“துலிப்” திட்டத்தின் கீழ் பட்டதாரிகளுக்கான பயிற்சி வாய்ப்புகளை உதவித்தொகையுடன் அளிக்க கோவை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும்,  ஸ்மார்ட் சிட்டி மூலம் தேர்வான 4400 நகரங்களிலும் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்புற விவரங்கள் துறை “துலிப்”  திட்டத்தினை அறிமுகப்படுத்தி உள்ளது.

 இத்திட்டத்தின் மூலம் தொழில்நுட்ப உதவியாளர், குடிநீர் விநியோகம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் நகர்ப்புற வசதிகள் உள்ளிட்ட எட்டு பிரிவுகளில் பயிற்சி பெறுபவர்களுக்கு மாதம் 10,000 ரூபாய் உதவித் தொகையாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோலவே பொது சுகாதாரம் புள்ளியியல் ஆய்வு மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் நகராட்சி நிதி நிர்வாகம் ஆகிய நான்கு  பிரிவுகளில் பயிற்சி பெறுவோருக்கு மாதம் 7,000 ரூபாய் உதவித் தொகையாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு உதவித்தொகை அனைத்து ...

இதற்கான பயிற்சி பெற விரும்புபவர்கள் விண்ணப்பிப்பதற்கான மின்னஞ்சல் முகவரியையும் கோவை மாநகராட்சி வழங்கியுள்ளது. நவீன தொழில்நுட்பங்கள், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் புதுமையான செயல்முறைகள் மூலம் இளைஞர்களுக்கு “துலிப்” வழங்கும் மிகப்பெரிய வாய்ப்பு இதுவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோலவே சென்னை மாநகராட்சி  பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கும்  மாநகராட்சி ஊழியர்களின் குழந்தைகளுக்கும் முன்னுரிமை அளிப்பதோடு மட்டுமல்லாமல்  அவர்களுக்கு இலவச தொழில் பயிற்சி அளிக்கவும் தேசிய வாழ்வியல் தொழில் பயிற்சி முறை திட்டம் துவங்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இவற்றில் கணினி இயக்குபவர், நிகழ்ச்சி தொகுப்பு உதவியாளர், குழாய் பொருத்துனர், எலக்ட்ரீசியன்,  பிட்டர், மோட்டார் மெக்கானிக் மற்றும் எலக்ட்ரானிக் மெக்கானிக் ஆகிய தொழில் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. விருப்பமுள்ள மாணவர்கள் தங்களது விண்ணப்பங்களை கீழ்க்கண்ட இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்குமாறு சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

http://gccapp.chennaicorporation.gov.in/cciti/

https://chennaicorporation.gov.in/

Categories

Tech |