தமிழகத்தின் திரையரங்கங்கள் திறப்பதற்கு எந்த ஒரு வாய்ப்பும் இல்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த மே மாதம் முதல் மத்திய அரசு ஊர் அடங்கிய பல்வேறு தளர்வுகளை கொண்டு வந்துள்ளது. அந்த தளர்வுகளால் மக்கள் அனைவரும் பயன் அடைந்துள்ளனர். கடந்த 10ஆம் தேதி உடற்பயிற்சிக் கூடங்கள் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து வருகின்ற ஒன்றாம் தேதியிலிருந்து மெட்ரோ ரயில்களை இயக்க மத்திய அரசு அனுமதி அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் திரையரங்குகளை திறப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் எழுந்துள்ளன. இதுகுறித்து தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜு கூறும்போது, ” திரையரங்குகளில் மக்கள் அதிக அளவு கூடுவதால் தற்போதைக்கு திரையரங்குகள் திறக்கப்படுவதற்காக எந்த ஒரு வாய்ப்பும் இல்லை.
கொரோனா பாதிப்பு குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பிய பின்னரே இது குறித்து முடிவு செய்யப்படும். குறைந்த அளவிலான ரசிகர்களை கொண்டு திரையரங்குகள் திறக்கப்பட்டால் அது தயாரிப்பாளர்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமையும். ஓடிடி- யில் படத்தை வெளியிடுவது சினிமா துறைக்கு ஆரோக்கியமற்றது. திரையரங்குகளை திறப்பதற்கு சிறிது கால அவகாசம் தேவைப்படுவதால் ஓடிடி-யில் படத்தை வெளியிடுவதற்கு சற்றுப் பொறுத்து தான் ஆக வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.