மேஷம் ராசி அன்பர்களே…!இன்று பலரின் விமர்சனத்திற்கு ஆளாகக் கூடும். இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் தினம் உள்ளதால் பொறுமையாக இருக்கவேண்டும். நிதானமாக செயல்பட வேண்டும். கோபங்கள் இல்லாமல் பேச வேண்டும். மிக முக்கியமாக ஜாமீன் கையெழுத்து போட கூடாது, வாக்குறுதிகள் எதுவும் கொடுக்கக் கூடாது. உரையாடும் பொழுது வாக்குவாதங்கள் இல்லாமல் பேச வேண்டும். எந்த வித பஞ்சாயத்துகளிலும் தலையிட வேண்டாம். மிக முக்கியமாக பண விஷயத்தில் ரொம்ப கவனமாக இருக்கவேண்டும். வாடிக்கையாளரிடம் இன்முகத்துடன் பேசுங்கள். சராசரி பணவரவு தான் இருக்கும். வெளியூர் பயணத் திட்டத்தில் சில மாற்றங்களைச் செய்வீர்கள். மாணவர்கள் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும். இன்று ஓரளவே பொருளாதாரம் வந்து சேரும். மன அழுத்தம் கொஞ்சம் இருக்கும். இன்று எல்லா வகையிலும் நல்லது நடப்பதற்கு இறை வழிபாட்டுடன் காரியங்களை செய்யுங்கள்.
கூடுமானவரை புதிய முயற்சிகளை மட்டும் தள்ளிப் போட்டு விடுங்கள். எதிர்ப்புகள் ஓரளவு விலகிச் சென்றாலும் சின்னச்சின்ன கருத்து வேறுபாடுகள் அனைத்து விஷயங்களிலும் இன்று இருக்கும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காலங்களில் மட்டும் முன்னேற்றம் இருக்கும். கண்டிப்பாக இன்று நீங்கள் புதிய முயற்சிகள் ஏதும் வேண்டாம். பிள்ளைகளுடைய நலனில் கொஞ்சம் அக்கறை காட்டுங்கள். அவர்களிடம் கோபப்படாமல் நடந்து கொள்ளுங்கள்.
கணவன் மனைவி இருவரும் எதையும் பேசி தீர்த்துக் கொள்ளுங்கள். கோபங்கள் ஏதும் வேண்டாம். இன்று காதலர்களும் கோபப்படாமல் நடந்து கொள்ளுங்கள். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று புதன் கிழமை என்பதால் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள். காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்.