சோதனை முடிவுகளை உரிய நேரத்தில் கொடுத்தால் மட்டுமே தடுப்பூசிக்கான ஒப்புதல் உரிமம் வழங்கப்படும் என ஆண்ட்ரூ பொல்லார் தெரிவித்துள்ளார்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு நாடுகளில் தடுப்பு மருந்து இறுதி கட்ட சோதனையில் இருந்து வருகிறது. அந்த வகையில் ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் முதல்கட்ட மனித சோதனையில், இந்த தடுப்பூசி நோய் எதிர்ப்புத் திறனை உருவாக்குவது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசியின் ஆய்வு பற்றிய போதிய முடிவுகளை விஞ்ஞானிகள் உரிய நேரத்தில் சமர்ப்பித்தால் மட்டுமே, இந்த வருடத்திற்குள் தடுப்பூசிக்கு உரிமம் பெற்று தரப்படும் என தடுப்பூசி குழுவின் இயக்குநர் ஆண்ட்ரூ பொல்லார்ட் தெரிவித்துள்ளார்.
மேலும் ஆண்ட்ரூ பொல்லார் அளித்த பேட்டியில்,தடுப்பூசியின் கிளினிகல் முடிவுகள் சேகரிக்கப்பட்டு சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், முடிவுகளை முழுமையாக மதிப்பீடு செய்யும் பணி துவங்கும் என கூறியுள்ளார். இதற்கிடையே, அதிபர் தேர்தலை முன்னிட்டு அமெரிக்காவில் இந்த தடுப்பூசிக்கு விரைவு ஒப்பதல் வழங்க டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.