சிம்மம் ராசி அன்பர்களே…! இன்று தயவுசெய்து எவரிடமும் உதவி கேட்க வேண்டாம். கூடுதல் உழைப்பு தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி நிலையை உருவாக்கும். அளவான முதலீடு போதுமானது. பொறுமையாகவும், நிதானமாகவும் செயல்படுங்கள். உடல்நலத்திற்கு ஒவ்வாத உணவு உண்பதை தவிர்க்கவேண்டும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். குழந்தைகள் உங்களுடைய சொல்படி கேட்டு நடப்பது மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். வழக்குகளை திறமையாக சமாளிப்பீர்கள். சில விஷயங்களை மட்டும் தள்ளிப் போடுங்கள். அதாவது இழுபறியாக இருக்கக் கூடிய விஷயங்களை தயவுசெய்து இப்போதைக்கு வேண்டாம். எடுத்த காரியங்களில் சாதகமான பலன் ஓரளவு கிடைக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சங்கடங்கள் சரியாகும் நாளாக இந்நாள் இருக்கும். அதே போல உங்களுடைய செயலில் வேகம் கூடும். உணர்ச்சிவசப்படாமல் எந்த ஒரு காரியத்தையும் செய்யுங்கள். அதே போல் எந்த ஒரு காரியத்திலும் அலட்சியம் காட்டவேண்டாம். இதையும் நீங்கள் கவனத்தில் கொள்ளுங்கள்.. உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை எந்தவித பிரச்சினையும் இல்லாமல் சுமுகமாக தான் இருக்கின்றது. ஆனால் சரியான உணவு வகைகள் மட்டும் எடுத்துக்கொள்ளவேண்டும். மீண்டும் ஒருமுறை ஞாபகப் படுத்துகிரோம் சரியான உணவு வகைகளை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள்.
வெளிவட்டார பழக்க வழக்கங்களில் எந்தவித பிரச்சினையும் இல்லை. போகும் இடத்தில் எல்லா விஷயங்களுமே சுமுகமாகவே நடக்கும். இன்று காதலர்கள் மட்டும் கொஞ்சம் கவனமாக நடந்து கொள்ளுங்கள். பேச்சில் நிதானத்தை கடைபிடியுங்கள். முக்கியமான பணியை இன்று நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பிரவுன் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. பிரவுன் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாகவே நடந்து முடியும்.
இன்று உங்களுக்கன அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிர்ஷ்டமான எண் : 2 மற்றும் 7
அதிர்ஷ்டமான நிறம் : வெள்ளை மற்றும் பிரவுன் நிறம்.