Categories
உலக செய்திகள்

முதன்முறையாக… முகாம்களுக்கு வெளியில் புதிதாக தொற்று… காசா கவலை..!

காசாவில் தடுப்பு முகாம்களுக்கு வெளியே குடியிருக்கும் மக்களில் நான்கு பேருக்கு புதிதாக பெற்று கண்டறியப்பட்டுள்ளது.

360 சதுர கிலோ மீட்டரில் கடற்கரையோரம் அமைந்திருக்கும் காசாவில், 20 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக வெளிநாடுகளில் இருந்து வருவோர், முகாம்களில் 21 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில் இதுவரை 109 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நிலையில், முகாமுக்கு வெளியே வசிக்கும் மக்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு முதன்முதலாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள எல்லைகளை மூடி, முழு ஊரடங்கு உத்தரவை பாதுகாப்புப்படையினர் பிறப்பித்துள்ளனர். இதனால் அப்பகுதி முழுவதும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு கட்டுப்பாட்டுக்குள் கொண்டாடப்பட்டுள்ளது. இது குறித்து முகமது ஸ்மிர் ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |