Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு… “திருமணம் கைக்கூடும்”… வெற்றி காண்பீர்…!

கன்னி ராசி அன்பர்களே…! இன்று உறவினர் வருகையால் மனம் மகிழ்ச்சியடையும். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு நிறைவேறும். தாராள பணவரவு இருக்கும். வீட்டு உபயோக பொருட்களை வாங்க கூடும். அரசியல் துறையில் உள்ளவர்களுக்கு அரசு சார்ந்த விஷயங்களில் இருந்து உதவிகள் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். ஆனால் குடும்ப விஷயங்களை கூறாமல் தவிர்ப்பது நல்லது. யாரிடமும் ரகசியங்களை தயவுசெய்து பகிர்ந்துகொள்ள வேண்டாம். கலைத்துறையினருக்கு எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் இழுபறியான நிலையே காணப்படும். சாதாரணமாக பேசினாலும் மற்றவர்கள் அதில் குறை காண்பார்கள். அதற்காக நீங்கள் வாக்குவாதங்கள் ஏதும் செய்ய வேண்டாம்.

கொஞ்சம் பொறுமையாக இருங்கள். இறை வழிபாட்டுடன் காரியங்களைச் செய்யுங்கள். எடுக்கும் முயற்சியில் ஓரளவு வெற்றி கிடைக்கும். முயன்றால் முடியாதது இல்லை என்பதை சரியாக உணர்ந்தவர் நீங்கள். அதனால் எப்பொழுதும் முயற்சிகளை செய்து கொண்டிருப்பீர்கள். வெற்றியும் பெற்றுக் கொண்டிருப்பீர்கள்.  உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை எந்தவித பிரச்சினையும் இல்லை சிறப்பாகவே இருக்கும். காதலர்களுக்கும் இன்றைய நாள் மிகவும் நல்ல நாளாகவே இருக்கங்க. எடுக்கும் முயற்சியில் வெற்றி இருக்கும். திருமண ஏற்பாடுகள் செய்யுங்கள்.

கண்டிப்பாக திருமணத்தில் முடியும். கூடுமான வரை யாரிடமும் கொடுக்கல்வாங்கல் விஷயங்கள் மட்டும் கொஞ்சம் கவனமாகவே நடந்து கொள்ளுங்கள். புதிதாக கடன்கள் ஏதும் வாங்க வேண்டாம். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அது மட்டுமில்லை இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாகவே நடந்து முடியும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்டமான எண்: 1 மற்றும் 5

அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் இளம்பச்சை நிறம்.

Categories

Tech |