பொருளாதார நெருக்கடி காரணமாக பாகிஸ்தான் சீனாவிடம் சரணடையும் நிலையில் உள்ளது.
சீனாவுடன் பாகிஸ்தான் இடையே பல்வேறு மோதல்கள் ஏற்பட்டு வந்துள்ள நிலையில், தற்போது கூடுதல் நெருக்கம் காட்டத் தொடங்கியுள்ளது. பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி அண்மையில் சீனா சென்று அந்நாட்டுடன் பிராந்திய, சர்வதேச விவகாரங்கள் குறித்து விவாதித்த நிலையில், சீனாவின் முன்னணி முதலீட்டு நிறுவனங்களுடன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சந்திப்பு மேற்கொண்டார். கொரோனா காரணமாக பாகிஸ்தான் பெரும் பொருளாதார வீழ்ச்சியை பாகிஸ்தான் சந்தித்துள்ள நிலையில், அந்நாட்டில் சீனா நிறுவனங்கள் முதலீடு செய்ய அவர் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
சீனா நிறுவனங்களுக்கு பிரதான முக்கியத்துவத்தை பாகிஸ்தான் தரும் என கூறிய அவர், அந்நாட்டு நிறுவனங்கள் பாகிஸ்தானில் பிரந்திய அலுவலகங்களை நிறுவ வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். தற்போது பெரும் கடும் பொருளாதார சுமையில் சிக்கியிருக்கும் பாகிஸ்தான், அந்நிய நாடுகள், அமைப்புகளிடம் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் தவித்துவருகிறது. சவுதி அரேபியாவுடன் வர்த்தக ரீதியாக மாட்டிக் கொண்டதால் அந்நாட்டின் உறவு சிக்கலுக்குள்ளாகியதால் தற்போது சீனாவிடம் முழுமையாக சரணடையும் சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கிறது.