கும்பம் ராசி அன்பர்களே…! இன்று மனதில் உற்சாகம் பிறக்கும். பேசுவதில் வசீகரம் நிறைந்து காணப்படும். முக்கியமான செயலில் சமயோசிதமாக ஈடுபடுவீர்கள். இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த இடையூறுகள் விலகிச்செல்லும். பணவரவும் நன்மையை கொடுக்கும். வீடு வாகனத்தில் மாற்றங்கள் செய்வீர்கள். இன்று உங்களது செயல்களை மற்றவர்கள் குறை காண நேரலாம். தெய்வ பக்தி அதிகரிக்கும். பயணங்கள் செல்ல நேரலாம்.
பணவரவு திருப்தியைக் கொடுக்கும். எதிர்பாராத சில திருப்பங்களும் ஏற்படும். சிந்தித்து செயல்படுவது காரிய வெற்றிக்கு உதவும். பெண்களுக்கு மன கவலை இன்று இருக்கும். அதே போல பெண்கள் சமையல் செய்யும் பொழுது கொஞ்சம் கவனமாக இருங்கள். பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள். மற்றவரிடம் இன்று கடன் எதுவும் வாங்க வேண்டாம். பொறுத்துக்கொள்ளுங்கள் தேவையை பூர்த்தி செய்வதில் நாட்டம் செல்லும்.
விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் இருக்கும். இப்போது இருக்கக் கூடிய சூழ்நிலையில் கடன் வாங்கி எதையும் நீங்கள் செய்ய வேண்டாம். இதில் மட்டும் கவனமாக இருங்கள். காதலர்களுக்கு எந்த விதத்திலும் இன்று முன்னேற்றமே இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது பிங்க் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 7
அதிர்ஷ்டமான நிறம்: பிங்க் மற்றும் நீல நிறம்.