மீனம் ராசி அன்பர்களே…! இன்று நண்பரின் விமர்சனம் மனதிற்கு வருத்தத்தை கொடுக்கும்.. பணியில் இருக்கும் தொழில் வியாபார நடைமுறையில் சில சிக்கல்கள் இருக்கும். அனுகூலத்தை பாதுகாக்க கடுமையாக போராட வேண்டியிருக்கும். சராசரி அளவில் தான் பணம் வரவு வந்து சேரும். வெளியூர் பயணத் திட்டத்தில் சில மாற்றங்களைச் செய்வீர்கள். இன்று மாணவர்கள் பாதுகாப்பில் கவனத்துடன் இருக்கவேண்டும். பொருளாதாரம் ஓரளவு சீராக இருக்கும். தொட்டது கூட ஓரளவு துலங்கும். அதேபோல சில நெருக்கடிகளில் சிக்கி கொள்ளாமல் இருக்க வேண்டும். புதியபணிகள் கொஞ்சம் தொந்தரவு கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதை பற்றி எல்லாம் கவலை படாதீர்கள். உடலை மட்டும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளுங்கள்.
சரியான உணவு வகைகளை எடுத்துக் கொள்ளுங்கள். அறிவாற்றலால் சில நன்மையும் நடைபெறும். தொழில் வியாபாரத்தில் எந்த ஒரு சிக்கலான முடிவுகளையும் தயவுசெய்து நீங்களே எடுக்காதீர்கள். மனைவியிடம் கேளுங்கள், பெரியோர்களிடம் ஆலோசனை கேளுங்கள். பின்னர் எந்த ஒரு விஷயத்தையும் முடிவு எடுங்கள். நிர்பந்தத்தின் பேரில் அதிகம் பயன் தராத பொருட்களை வாங்க வேண்டாம். குடும்பத்தில் அமைதியான சூழ் நிலை தான் காணப்படும். உறவினர் வருகை இருக்கும். குழந்தைகள் முன்னேற்றத்திற்காக பாடுபடுவீர்கள். வழக்கு விவகாரங்களில் சாதகமான நிலையே இருக்கும்.
சொத்துப் பிரச்சினைகளில் அனுகூலமும் உண்டாகும். காதலர்களுக்கு இன்றைய நாள் ஓரளவு சிறப்பாகவே இருக்கும். பிரச்சினைகள் ஏதும் இல்லை. இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்ற சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாகவே நடந்து முடியும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்டமான எண்: 7 மற்றும் 8
அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் மற்றும் நீல நிறம்.