Categories
மாநில செய்திகள்

13% குறைவு : மருத்துவ படிப்பு இனி கனவு மட்டும் தானா…? சமூக ஆர்வலர்கள் ஆவேசம்….!!

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை விகிதம் குறைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து வலுத்து வருகின்றன. அதற்கான காரணம், ஒவ்வொரு ஆண்டும், நீட் தேர்வை காரணமாக வைத்து ஏதேனும் ஒரு மாணவியோ, மாணவனோ   தற்கொலை செய்து தனது உயிரை மாய்த்து கொண்டு வருகின்றனர். இதற்கான காரணம் இந்த நீட் தேர்வில் வெற்றி பெறுவதற்காக  பணத்தை செலவு செய்து படிக்கும் கூட்டம் ஒரு புறம் இருக்க,

கல்விக்கு கூட பணம் செலவு செய்ய முடியாமல் அரசு மற்றும் அரசு  உதவி பெறும் பள்ளியில் படித்து வரும் ஏழை எளிய மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு என்பது  கனவாகிவிட்டது என நீட் தேர்வு குறித்து  சமூக ஆர்வலர்கள் கூறிய கருத்து தற்போது நிஜமாகி வரும் சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது. தமிழகத்திலிருந்து நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 13 சதவிகிதம் குறைந்துள்ளது தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 714 பேர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த நிலையில், நடப்பாண்டு ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 990 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். இதையடுத்து ஏழை எளிய மாணவர்களுக்கு நீட் பயிற்சி அளிப்பது குறித்த குறைந்தபட்ச நடவடிக்கையாவது  அரசு மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் ஒருபுறமும், நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் மறுபுறமும் தொடர்ந்து தங்களது கோரிக்கைகளை முன்னிறுத்தி வருகின்றனர். 

Categories

Tech |