நடிகர் விஜய்யின் திருமண நாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் அடித்த போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்றைய தினம் பிரபல நடிகர் ரசிகர்களால் தளபதி என்று அன்போடு அழைக்கப்படும் விஜய் அவர்களது திருமண நாள். இந்த நன்னாளை அவரது குடும்ப உறுப்பினர்கள் மட்டும் கொண்டாடாமல், அவரது ரசிகர்களும் சேர்ந்து கொண்டாடி விஜய் அவர்களுக்கும், அவரது மனைவிக்கும் சேர்த்து பாராட்டுக்களை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தொடர்ந்து பதிவிட்டு வந்தனர்.
இந்நிலையில் இளையதளபதியின் ரசிகர் இயக்கம் ஒன்று இதற்கெல்லாம் ஒருபடி மேலாக சென்று பரபரப்பு போஸ்டர் ஒன்றை அடித்து ஊர் முழுவதும் ஒட்டியுள்ளது. அதில், மக்கள் இயக்கத்தின் புரட்சித்தலைவி என விஜய் மனைவி சங்கீதாவை ஜெயலலிதா போலவும், மக்கள் இயக்கத்தின் புரட்சித்தலைவர் என விஜய்யை எம்ஜிஆர் போலவும் போஸ்டரில் சித்தரித்து இருந்ததால் அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.