Categories
மாநில செய்திகள்

அரசு கலைக்கல்லூரி மாணவர்கள்… இன்று வெளியாகும் சேர்க்கை விவரம்…!!!

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின்  மாணவர்கள் அனைவருக்கும் குறுஞ்செய்தி மூலமாக சேர்க்கை விவரம் குறித்த தகவல்கள் அனுப்பப்பட உள்ளன.

கொரோனா அச்சத்தால் தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நடப்பு கல்வியாண்டின் மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவு கடந்த மாதம் 20ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரையில் ஆன்லைன் மூலமாக நடந்தது. கிட்டத்தட்ட 109 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள 95,000 காலி இடங்களுக்கு 3,12,000 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில், 109 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள ஒவ்வொரு பாடப் பிரிவுகளிலும் தேர்வு செய்யப்பட்ட அனைத்து மாணவ மாணவிகளுக்கும், மாணவர் சேர்க்கை வழிமுறைகள் மற்றும் கட்டண விபரங்கள் அந்தந்த கல்லூரிகள் மூலமாக மின்னஞ்சல் மற்றும் செல்போனில் குறுஞ்செய்தியாக இன்று அனுப்பப்பட உள்ளது.

இதனைத் தொடர்ந்து சிறப்பு பிரிவினருக்கான மாணவர் சேர்க்கை வருகின்ற 28ம் தேதியும், பொதுப் பிரிவினருக்கான மாணவர் சேர்க்கை 29-ம் தேதி முதல் அடுத்த மாதம் 4-ஆம் தேதி வரையில் நடக்க இருப்பதாக கல்லூரிக் கல்வி இயக்ககம் தகவல் அளித்துள்ளது.

Categories

Tech |