இன்ஜினியரிங் படிப்பில் சேரும் மாணவர்களுக்கான ரேண்டம் எண்ணை உயர்கல்வித்துறை அமைச்சர் இன்று வெளியிடுகின்றார்.
இந்த வருடத்திற்கான இன்ஜினியரிங் படிப்பில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த மாதம் 15ஆம் தேதி தொடங்கி, இந்த மாதம் 16ஆம் தேதி முடிவடைந்துள்ளது. இதற்கு முந்தைய ஆண்டுகளை ஒப்பிடுகையில், இந்த வருடம் இன்ஜினியரிங் படிப்பில் சேர்வதற்கு மாணவ-மாணவிகள் அனைவரும் முந்திக்கொண்டு விண்ணப்பித்துள்ளனர். தற்போது வரை 1,60,834 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். அவர்களின் 1,31,436 மாணவர்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்தி உள்ளனர்.
அதில் 29,398 பேர் விருப்பம் தெரிவிக்காத நிலையில், கட்டணம் செலுத்தவில்லை. விண்ணப்ப கட்டணம் செலுத்தி அவர்கள் அனைவரும் அடுத்ததாக சான்றிதழ் பதிவேற்றம் செய்து கொள்ளலாம். அதற்கான கால கட்டம் நேற்று முன்தினம் முடிவடைந்துள்ளது. அதில் 14,206 பேர் தங்களுடைய சான்றிதழ்களை ஆன்லைன் மூலமாக பதிவேற்றம் செய்துள்ளனர். விண்ணப்ப கட்டணம் செலுத்தியவர்களின், 17,230 பேர் விருப்பம் காட்டாதது இதன் மூலமாக தெரிய வந்துள்ளது.
இந்தப் புள்ளிவிவரங்களை காணும்போது, கலந்தாய்வு தொடங்குவதற்கு முன்னரே விண்ணப்பித்தவர்களில் 46,628 பேர் ஆர்வம் காட்டாத நிலையில் இருப்பது தெரியவந்துள்ளது.இந்நிலையில் ரேண்டம் எண் வெளியிடப்பட உள்ளது. விண்ணப்ப கட்டணம் செலுத்தி, சான்றிதழ் பதிவேற்றம் செய்த மாணவர்கள் அனைவருக்கும் ரேண்டம் எண்ணை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் இன்று மாலை 4 மணி அளவில் சென்னை தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரியின் ஒருங்கிணைந்த பயிலரங்க வளாகத்தில் வெளியிட உள்ளார்.