Categories
உலக செய்திகள்

“ஜெர்மனியிடம் மூக்கறுபட்ட பாகிஸ்தான்”… இது தான் காரணமா?

நீர்மூழ்கி கப்பலின் புதிய அமைப்பை பாகிஸ்தான்  கேட்டபோது ஜெர்மன் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.

பொதுவாக நீர்மூழ்கிக் கப்பல்கள் தண்ணீருக்குள் இரண்டு நாட்களுக்கு மேல் மூழ்கி நிற்க முடியாது. எப்படியும் வெளியே வந்துதான் ஆகவேண்டும். ஆனால் இந்த முறையை மாற்றி மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்ப உதவியுடன் பாகிஸ்தான் புதிய நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்கி இருக்கிறது அதன் பெயர் “ஏர் இன்டிபென்டன்ட் ப்ராபல்ஷன்” இந்த அமைப்பை பயன்படுத்தி நீர்மூழ்கி  கப்பல்கள் பல வாரங்கள் தண்ணீரில்  மூழ்கி நிற்க முடியும்.

மேலும் தண்ணீருக்குள் பதுங்கியவாறு தாக்குதல்களை மேற்கொள்ளவும் அந்த இடத்தில் இருந்து தப்பித்து கொள்ளவும் முடியும். இத்தகைய புதிய தொழில்நுட்ப அமைப்பை பாகிஸ்தான் ஜெர்மனி நாட்டிடம் கேட்டுள்ளது. ஆனால் ஜெர்மன் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கல் தலைமையிலான பாதுகாப்புக்குழு இத்தகைய புதிய அமைப்பை பாகிஸ்தானிடம் கொடுக்க மறுத்து விட்டதால், பாகிஸ்தான் தற்போது மூக்கு உடைபட்டு உள்ளது.

ஜெர்மனி இவ்வாறு மறுப்பதற்கு காரணம் 2017 ஆம் ஆண்டு காபூலில் உள்ள ஜெர்மன் தூதரகத்தில் தீவிரவாதிகள் நடத்திய குண்டு வெடிப்பில், 150 பேர் பலியாகினர். இந்தத் தீவிரவாத அமைப்பின் பின்னால் பாகிஸ்தான் அமைப்பினர் இருந்துள்ளனர். ஆனால் இந்த தீவிரவாத தாக்குதல்களுக்கு பாகிஸ்தான் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால்தான் நீர்மூழ்கி கப்பலின் புதிய அமைப்பு பாகிஸ்தானுக்கு கொடுக்கப்படவில்லை என ஜெர்மன் அரசு தெரிவித்துள்ளது.

Categories

Tech |