போரிஸ் ஜான்சன் தன்னுடைய பிரதமர் பதவியிலிருந்து விலகிக் கொள்வதாக சமீபத்தில் செய்தி ஒன்று வெளியானது.
இங்கிலாந்து பிரதமரான போரிஸ் ஜான்சன் தன்னுடைய பதவியில் இருந்து 6 மாத காலத்திற்குள் விலகிக்கொள்வதாக வெளியான செய்தி பரபரப்பாக வைரலாகி வந்தது. சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த போரிஸ் ஜான்சன் அதிலிருந்து மீண்டு வர முடியாமல் திணறிக் கொண்டிருப்பதால் பதவியிலிருந்து விலகிக் கொள்ள நினைத்திருக்கலாம் என்று மக்கள் பரவிய அந்த செய்தியை நம்பியுள்ளனர். அதுமட்டுமில்லாமல் இந்த செய்தியைப் பரப்பியவர் பிரதமரின் ஆலோசகராக பணிபுரியும் டொமினிக் கம்மிங்ஸ் என்பவரின் மாமனார் 84 வயதான ஹம்ப்ரி வேக்ஃபீல்ட் ஆவார்.
இந்நிலையில் பிரதமர் அலுவலகம் வேகவேகமாக போரிஸ் ஜான்சன் குறித்து பரவிய செய்தி வதந்தி என்பது குறித்தும் தற்போது பெரும் தலைவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீளமுடியாமல் இருக்கும் நிலையில் மக்கள் இந்த செய்தியை நம்பி இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் ஹம்ப்ரி வேக்ஃபீல்ட் என்பவர் ஏற்கனவே இதுபோன்ற சில குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளார். அண்மையில் இங்கிலாந்து உள்துறைச்செயலரான பிரீத்தி பட்டேலை வம்புக்கிழுத்து அவருக்கு எதிரான செய்தியைப் பரப்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.