மேட்டூர் அணையின் நீர்வரத்து வினாடிக்கு 6,957 கன அடியிலிருந்து 6,204 கன அடியாக குறைந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், அங்கிருக்கின்ற கபினி, கிருஷ்ண ராஜசாகர் ஆகிய அணைகள் மிக வேகமாக நிரம்பியுள்ளன. அதனால் அந்த இரு அணைகளில் இருந்தும் காவிரி ஆற்றுக்கு வினாடிக்கு 1,50,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. அதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதிக அளவு உயர்ந்தது.
மேலும் டெல்டா பாசனத்திற்காக காவிரியில் 18,000 கன அடி நீர், கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய்களுக்கு 600 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. தற்போது மழையின் அளவு குறைந்துள்ளதால் திறந்துவிடப்படும் நீரின் அளவும் குறைந்துள்ளது. இதனைத்தொடர்ந்து மேட்டூர் அணையின் நீர்வரத்து வினாடிக்கு 6,957 கன அடியிலிருந்து 6,204 கன அடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 95.92 அடியாகவும், நீர் இருப்பு 59.66 டி.எம்.சி.யாகவும் உள்ளது.