Categories
உலக செய்திகள்

“எதிராளிகள் கள்ள ஓட்டால் தான் வெல்ல முடியும்”… அதிபர் டிரம்ப் உறுதி…!!

வருகின்ற அதிபர் தேர்தலில் கள்ள ஓட்டால் மட்டுமே நம்மை ஜெயிக்க முடியும் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் பரவி வரும் இந்த கொரோனா வைரஸ் காலத்திலும் அமெரிக்காவின் அதிபர் தேர்தலை நடத்த அந்நாடு முடிவு செய்துள்ளது. ஆனால் பெரும்பாலும் வாக்குப்பதிவுகள் இணையம் வழியாகவே நடத்தப்படும் என ஏற்கனவே தெரிவித்திருந்தது. இந்த வழி வாக்குப்பதிவுகள் நடைமுறைப்படுத்த அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. மேலும் தன்னுடைய கட்சி பிரச்சாரத்தில் அதிபர் டிரம்ப் பேசுகையில், ” இந்தத் தேர்தலில் அதிக கள்ள ஓட்டுகள் போடப்படலாம் ஆனால் நாம் தான் வெற்றி பெறுவோம்” இவ்வாறு அவர் பிரச்சாரம் செய்தார்.

மேலும் இணையம்வழி வாக்குப்பதிவுகள் மூலம் பல கள்ள ஓட்டுகளும் மோசடிகளும் நடைபெற அதிக வாய்ப்பு உள்ளதாக அதிபர் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு படையினர் வைத்து எப்பொழுதும் நடைமுறைப்படுத்தப்படும் வாக்குச்சாவடியிலேயே அதிக மோசடிகள் நடைபெறுகின்றன. எனவே இந்த முறை மோசடிகள் அதிகம் நடக்க வாய்ப்பு உள்ளதால் எதிரணியினர் நம்மை கள்ள ஓட்டால் மட்டுமே ஜெயிக்க முடியும் என உறுதியாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |