Categories
மாநில செய்திகள்

வங்கி கடன் வழக்கு… உச்ச நீதிமன்றம் கண்டனம்… திணறும் மத்திய அரசு…!!!

மத்திய அரசின் வங்கிக்கடன் வழக்கில் உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

வங்கி கடன்களை திரும்ப செலுத்துவது தொடர்பான வழக்கில் மத்திய அரசிற்கு எதிராக உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. வட்டிக்கு வட்டி வசூல் செய்வதை ரத்து செய்யக்கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது. இதுகுறித்து உச்சநீதிமன்றம் கூறும்போது, ” மத்திய அரசு வங்கி கடன் விவகாரத்தில் ரிசர்வ் வங்கியின் பின்னால் ஒளிந்து கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளது. நீங்கள் அறிவித்த பொது முடக்க உத்தரவு காரணமாகவே இந்தப் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

வட்டிக்கு வட்டி வசூல் செய்வது ரிசர்வ் வங்கியின் முடிவு என கூறி மத்திய அரசு தப்பித்துக் கொண்டு இருக்கிறது. உங்களின் பணியை செய்யும் நேரம் இது இல்லை. தேவையான நிவாரணத்தை வழங்குவதே மிக அவசியம். ஒரு வாரத்திற்குள் வங்கிக்கடன் வழக்கில் தெளிவான விளக்கத்தை மத்திய அரசு அளிக்க வேண்டும்” என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |