நடுக்கடலில் பொம்மையுடன் சிக்கித் தவித்த சிறுமியை கடற்படையின் மீட்புப் படையினர் பத்திரமாக மீட்டனர்.
ஆன்ட்டிரியோ நகரை சேர்ந்த ஒரு தம்பதியினர் தங்களது குழந்தையுடன் அப்பகுதியில் உள்ள கடலுக்கு கப்பலில் சுற்றுலாவாக சென்றுள்ளனர். அப்பொழுது குழந்தை ஒரு பலுனால் செய்யப்பட்ட குதிரை பொம்மையை வைத்து விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது கடலில் பெரிய அலை சீற்றம் ஏற்பட்டது. பெற்றோரின் கவனக்குறைவால் திடீரென்று அந்தக் குழந்தை கடலில் பொம்மையுடன் போய் விழுந்தது. இதனைக் கண்டு கதறி அழுத பெற்றோர் கடற்படை காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பின் விரைந்து வந்த கடற்படை மீட்பு படையினர் கடலுக்குள் தேடுதல் வேட்டை நடத்தியபோது சுமார் 1 கிலோ மீட்டருக்கு அப்பால் குதிரைப் பொம்மையைக் கெட்டியாகப் பிடித்தவாறு சிறுமி கடலில் தத்தளித்து கொண்டிருப்பது தெரியவந்தது. அதன்பின் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 5 வயது சிறுமியை எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் கடற்படை மீட்பு பணியினர் பத்திரமாக மீட்டெடுத்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர். நடுக் கடலில் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சிறுமியை கண்டு அப்பகுதியில் உள்ளவர்கள் ஆச்சரியத்தில் உறைந்தனர்.