சென்னையில் மண்டல வாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், இறப்பு மற்றும் குணமடைந்தவர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பால், கடந்த சில நாட்களாக நாளொன்றுக்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தொடக்கத்தில் சென்னை மற்றும் சென்னையைச் சார்ந்துள்ள மாவட்டங்களில் மட்டுமே அதிக அளவு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. ஆனால் ஜூலை மாதம் முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொரோனா பரவல் அதிகமாக தென்படுகிறது.
இந்நிலையில் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், இறப்பு மற்றும் சிகிச்சையிலிருந்து குணமடைந்தவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
மண்டலம் | குணமானவர்கள் | இறப்பு | பாதிப்பு |
திருவொற்றியூர் | 3,870 | 126 | 260 |
மணலி | 1,858 | 29 | 161 |
மாதவரம் | 3,882 | 62 | 574 |
தண்டையார்பேட்டை | 10,085 | 262 | 809 |
ராயபுரம் | 11,882 | 277 | 862 |
திருவிக நகர் | 8,639 | 268 | 1,042 |
அம்பத்தூர் | 7,607 | 133 | 1,197 |
அண்ணா நகர் | 12,838 | 282 | 1,547 |
தேனாம்பேட்டை | 11,479 | 377 | 884 |
கோடம்பாக்கம் | 12,873 | 285 | 1,548 |
வளசரவாக்கம் | 6,776 | 132 | 1,098 |
ஆலந்தூர் | 3,869 | 71 | 635 |
அடையாறு | 8,411 | 174 | 1,258 |
பெருங்குடி | 3,476 | 64 | 556 |
சோழிங்கநல்லூர் | 2,856 | 28 | 564 |
இதர மாவட்டம் | 1,554 | 53 | 376 |
மொத்தம் | 1,11,955 | 2,623 | 13,371 |