ஐந்து வெவ்வேறு நாடுகளை சேர்ந்தவர்களுக்கு அமெரிக்க நாட்டின் குடியுரிமை வெள்ளை மாளிகையில் வைத்து வழங்கப்பட்டது.
இந்தியா, பொலிவியா, சூடான், கானா, லெபனான் போன்ற நாடுகளை சேர்ந்த 5 பேருக்கு வெள்ளை மாளிகையில் வைத்து குடியுரிமை சான்றுகள் அளிக்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் இந்தியாவை சேர்ந்த பெண் சாப்ட்வேர் என்ஜீனியர் சுதா சுந்தரி நாராயணன் அரிய நிகழ்வாக அதிபர் டிரம்ப் முன்பு அந்நாட்டு குடிமகளாக உறுதியேற்றுக் கொண்டார்.
அப்போது இந்திய பெண்மணி சுதா சுந்தரி நாராயணனை வரவேற்று டிரம்ப் பேசியபோது, மிகவும் திறமையான சாப்ட்வேர் டெவலப்பர் என்று புகழ்ந்தார். மேலும் சுதா சுந்தரி, 13 ஆண்டுகளுக்கு முன்னதாக அமெரிக்கா வந்து சேர்ந்துள்ளார். ஆனால் அவருக்கு அந்நாட்டு குடியுரிமை தற்போது அளிக்கப்பட்டுள்ளது. இந்த வெள்ளை மாளிகையில் நடந்த நிகழ்வில் கலந்துகொண்ட 5 பேரையும் அமெரிக்க சட்டவிதிகளை பின்பற்றுமாறு அதிபர் டிரம்ப் கேட்டுக்கொண்டார்.