Categories
உலக செய்திகள்

தாய் மற்றும் மனைவியை கொன்ற இந்திய தடகள வீரர்… தற்கொலைக்கு முயற்சி.. கைது செய்த போலீஸ்..!!

முன்னாள் தடகள வீரர் இக்பால் சிங் தன்னுடைய தாய் மற்றும் மனைவியை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இவர் 1983-ம் வருடம் குவைத்தில் வைத்து நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்சிப்பில் குண்டு ஏறிந்து  வெண்கல பதக்கத்தை தட்டிச் சென்றவர் இக்பால் சிங். தற்போது 62 வயதான இவர் அமெரிக்கா சென்று குடியேறி, தன்னுடைய மனைவி மற்றும் தாயுடன் பென்சில்வேனியாவில் உள்ள நியூடவன் டவுன்சிப்பில் வசித்து வரும் இவர் டாக்ஸி ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் சென்ற ஞாயிற்றுக்கிழமையில் தன்னுடைய தாய் மற்றும் மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தானும் கத்தியால் குத்திக் கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இந்த தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து இக்பால் சிங் வீட்டிற்கு சென்று அங்கு ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை மீட்டு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தபின் கைது செய்தனர். மேலும் எதற்காக தன்னுடைய தாய் மற்றும் மனைவியை கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்ய முயற்சி செய்தார் என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Categories

Tech |