Categories
தேசிய செய்திகள்

வருவாய் இழப்பை ஈடுகட்ட பார்கள் திறப்பு… கலால்துறை மந்திரி…!!!

கர்நாடக மாநிலத்தில் வருகின்ற ஒன்றாம் தேதி முதல் பார்கள் திறக்க உள்ளதாக கலால் துறை மந்திரி கூறியுள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அதனை கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கத்தில் மதுக்கடைகள், பார்கள் மற்றும் கேளிக்கை விடுதிகள் அனைத்தும் மூடுவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் ஊர் அடங்கிய சில தளர்வுகள் விடுக்கப்பட்டதை தொடர்ந்து, மதுபான கடைகள் திறப்பதற்கு அரசு அனுமதி அளித்தது. இருந்தாலும் கொரோனா அச்சத்தால் குடிமகன்கள் யாரும் மது வாங்க ஆர்வம் காட்டுவதில்லை. அதனால் கர்நாடகத்தில் மது விற்பனை மிகக் குறைவாகவே இருக்கின்றது.

கடந்த ஆண்டு 62 லட்சத்திற்கும் மேற்பட்ட பீர் பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டு 53 லட்சம் பீர் பாட்டில்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. மது விற்பனையும் சற்று குறைவாகவே இருப்பதால், கர்நாடக அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது பற்றி கர்நாடக கலால் துறை மந்திரி நாகேஷ் கூறுகையில், ” கொரோனா ஊரடங்கு காரணமாக கலால்துறைக்கு 3 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. சில நாட்களாக எங்களுக்கு 2000 கோடி ரூபாய் வருவாய் மட்டுமே கிடைத்துள்ளது.

அதனால் வருகின்ற எட்டு மாதங்களில் வருவாய் இழப்பை சரி செய்வதற்கு தகுந்த நடவடிக்கைகள் எடுப்போம். பார்கள் மற்றும் கேளிக்கை விடுதிகளை திறப்பதால் மட்டுமே மது விற்பனையை அதிகரிக்க முடியும். வருகின்ற ஒன்றாம் தேதி முதல் பார்கள் மற்றும் கேளிக்கை விடுதிகளை திறப்பதற்கு முடிவு செய்திருக்கிறோம். இதுபற்றி முதல் மந்திரியிடம் பேசுவேன். அதன் பின்னர் அரசு அனுமதி அளித்ததும் பார்கள் மற்றும் கேளிக்கை விடுதிகளை திறப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |